Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா அறிவிப்பு

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா அறிவிப்பு

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார்.

இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர்.

ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இது குறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தபோதிலும், பிரிவது என முடிவு செய்துள்ளனர்.

மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
Next Post
வேலை நேரத்தில் நாடகம் பார்க்கும் ஊழியர்கள்; மன்னார் பொது வைத்தியசாலையில் தாயும் சேயும் உயிரிழப்பு

வேலை நேரத்தில் நாடகம் பார்க்கும் ஊழியர்கள்; மன்னார் பொது வைத்தியசாலையில் தாயும் சேயும் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு