இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – காஸா போரின் போது அவர்கள் நடத்திய போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
” போர்க்குற்றம், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனவும் அவற்றை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதம அமைச்சர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன.