மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பதிலாக பிரேகரிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சிக்காக நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய நிலையில், பாரியதொரு வெற்றியை பெற முடிந்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஓய்வுவெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கட்சித் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரான ரில்வின் சில்வாவின் ஆதரவு எப்போதும் கட்சிக்கு தேவை என சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.