Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

3 years ago
in முக்கிய செய்திகள்

நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

இதற்கமைய 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவையடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவிசெய்யப்பட்டார். குறித்த வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்றார்.

மேலும் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று பயணமாகிறார்.

இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஒப்பந்தங்கள் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலர் வினய் மோகன் குவத்ரா குறித்த 5 ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்ததுடன், இலங்கை – இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருதரப்பு பொருளாதாரத உறவுகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் திருகோணமலையில் பொருளாதார வலயத்திற்கான ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும் இலங்கைக்கு தேவையான மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பால் உற்பத்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஆகியனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை மையப்படுத்தி கைச்சாத்திடப்பட உள்ளன.

அத்துடன் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது டெல்லி விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிப்பு; அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிப்பு; அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.