Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்குண்ட மட்டு விவசாயி ஒருவர் விமானப்படையினரின் கெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டார்

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்குண்ட மட்டு விவசாயி ஒருவர் விமானப்படையினரின் கெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டார்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் இரு தினங்களாக சிக்குண்டிருந்த நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒரு விவசாயியை விமானப்படையின் கெலிகொப்டர் மூலம் இன்று (27) புதன்கிழமை மீட்டனர்.

குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு கடந்த திங்கட்கிழமை (25) சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்திஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்தபகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டிருந்தனர்.

இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையினை இன்று புதன்கிழமை விமானப்படையினர் மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை கொலி கொப்டரிர் மூலம் மீட்டெடுத்தனர்.

அதேவேளை கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்கு கெலிகொப்டரில் இருந்து கயிறு இறக்கப்பட்டபோதும் அவர்கள் கயறில் ஏறும் பயத்தினால் ஏறமறுத்துள்தனால் அவர்களை மீடகமுடியாமல் கொலிகொப்டர் திரும்பியுள்ளனர்.

அதேவேளை புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியுள்ளதுடன், ஏனைய இருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த சிக்குண்ட 4 குடும்பங்களையும் படகின் மூலம் மிட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

July 7, 2026
நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்
செய்திகள்

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

July 7, 2026
நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

July 7, 2026
நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

July 7, 2026
Next Post
“மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” ; நடிகர் விஜய்

“மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” ; நடிகர் விஜய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு