பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பின் கீழ் இவ்வாறு பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, லங்கா சதொச முழுஆடை பால் மா 400 கிராம் பொதி ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 999 ரூபாவாகும்.