தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப் படி, வீதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய 58 பேருந்துகள் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.நாடளாவிய ரீதியில் இவ்வாறான சோதனைகள் தொடர்கின்றன என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.