சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தாழமுக்கம் தொடர்பிலான சில எதிர்வுகூறல்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நன்கமைந்த தாழமுக்க பகுதியானது, தற்போது முல்லைத்தீவின் கிழக்காக 225 km தூரத்திலும்,
கோடியக்கரை முனையில் இருந்து தென்கிழக்காக 375 km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது இன்று (11) மாலை முல்லைதீவு ஊடாக நகர்ந்து, இன்று நள்ளிரவு காங்கேசன்துறை ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் இது நாளை (12) அதிகாலை முதல் நாளை மறுதினம் அதிகாலை வரை (அதாவது நாளைய தினம் முழுவதுமாக) பாக்ஜலசந்தி (Palk Strait) வழியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உட்பட வட இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என மேலும் தெரிவித்தார்.