Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கடவுளே அஜித்தே”; கவலை அளிப்பதாக நடிகர் அஜித் அறிக்கை

“கடவுளே அஜித்தே”; கவலை அளிப்பதாக நடிகர் அஜித் அறிக்கை

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி அண்மை காலமாக டிரெண்ட் செய்து வந்த நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் விரும்பும் கார் ரேஸிங்கிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கார் ரேஸிற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது

சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக மிகவும் டிரெண்டாகி வரும் வீடியோ என்றால் அது கடவுளே அஜித் என்பதாக தான் இருக்க முடியும். தியேட்டர், பொது இடங்கள் என ஆரம்பித்த இந்த கோஷம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி வரை ஒலித்தது. இன்ஸ்டாவிலும் இந்த வீடியோவை வைத்து பல ரீல்ஸ்களுக்கு லைக் குவிந்து வருகிறது.

தல என்று ரசிகர்கள் அழைப்பதையே ஏற்காத அஜித், கடவுளே என்று அழைப்பதை எப்படி அவர் ஏற்பார். வாழு, வாழ விடு என்று எப்போது தனக்கென பாதையில் நடந்து வரும் தற்போது கடவுளே என்று ரசிகர்கள் அழைப்பதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள கடிதத்தில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க….அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
முஸ்லிம் காங்கிரஸால் தடைப்பட்டுப் போனது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தெரிவு

முஸ்லிம் காங்கிரஸால் தடைப்பட்டுப் போனது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தெரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.