Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதையை மாற்ற சொன்ன சூர்யா; உள்ளே வந்த சிவகார்த்திகேயனுடனும் முரண்பட்ட சுதா கொங்கரா

கதையை மாற்ற சொன்ன சூர்யா; உள்ளே வந்த சிவகார்த்திகேயனுடனும் முரண்பட்ட சுதா கொங்கரா

2 years ago
in சினிமா, செய்திகள்

சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் புறநானூறு திரைப்படம் உருவாகவுள்ளது. முதலில் புறநானூறு திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு கதையில் சூர்யா சில மாற்றங்களை கூறியதாகவும், சுதா கொங்கரா செய்த மாற்றங்களில் சூர்யாவிற்கு உடன்பாடு இல்லை என்பதாலும் இப்படத்திலிருந்து சூர்யா விலகியதாக சொல்லப்படுகின்றது.

சூரரைப்போற்று என்ற தேசிய விருது பெற்ற படத்தை கொடுத்த இந்த காம்போ பிரிந்தது சூர்யாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. அதையடுத்து சூர்யாவிற்கு பதிலாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. மேலும் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

SK25 என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி , அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடிக்கவுள்ளதுடன்,ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் . மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ ஷூட் 03.12 நடைபெற்றதாம். அந்த டெஸ்ட் ஷூட்டின் போது இயக்குனர் சுதா கொங்கராவிற்கும் சிவகார்த்திகேயனும் மோதல் ஏற்பட்டதாகவும், சிவகார்த்திகேயன் ஷூட்டில் இருந்து வெளியேறியதாகவும் ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது.

சிவகார்த்திகேயன் தற்போது SK23 படத்திற்காக தாடி வைத்துள்ளார். ஆனால் சுதா கொங்கரா ப்ரோமோ ஷூட்டிற்காக தாடியை எடுக்குமாறு கூறியிருக்கின்றார். இந்த விஷயத்தில் தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கோபமாக வெளியேறியதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இது வதந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தான் சிவகார்த்திகேயனின் இரசிகர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியே இந்த பிரச்சனை உண்மையாக இருந்தால் விரைவில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இந்த படத்தின் ப்ரோமோ ஷூட் துவங்கவேண்டும் என்கின்றனர் இரசிகர்கள். ஆனால் இத்தகவல் உண்மையா ? இல்லை வதந்தியா ? என உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே SK25 திரைப்படத்திலும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு

பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.