அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (16) அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இருந்தும் எதிர்க்கட்சியினாலும் சபாநாயகரின் பெயர் முன்மொழியப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்த போதிலும், அது நெறிமுறையற்றது எனவும் கூறப்படுவதுடன், வேறு பெயர் பரிந்துரைக்கப்பட்டால், அந்த பெயரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றுருப்பவர் என்பதுடன், அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.