இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கொழும்பு நோக்கித் தொடருந்தில் பயணிப்பதற்காக, சம்மாந்துறை பகுதியில் உள்ள தமது வீட்டிலிருந்து ஏறாவூர் நகருக்குப் பிரவேசித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.