ஏறாவூர் நகர, பிரதேச செயலகத்தில் இன்று (20) பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலகத்தில் பணிபுரியும் நிருவாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இப்பணிப் புறக்கணிப்பின் காரணமாக பிரதேச செயலகத்திற்கு சேவையை பெற வந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.