Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மியன்மாரிலிருந்து இலங்கை வந்த அகதிகளின் கதை

மியன்மாரிலிருந்து இலங்கை வந்த அகதிகளின் கதை

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.

இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.

அதேவேளை மியான்மார் அகதிகள் படகு நேற்றையதினம் முல்லைத்தீவு கடலில் கரையொதுங்கைய நிலையில், அவர்கள் தற்போது திருகோண்மலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்
செய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்

May 23, 2025
கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

May 23, 2025
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

May 23, 2025
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 வீதம் வரி விதிக்கப்படும்; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 வீதம் வரி விதிக்கப்படும்; ட்ரம்ப் அறிவிப்பு

May 23, 2025
கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை

May 23, 2025
அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை
செய்திகள்

அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை

May 23, 2025
Next Post
மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தைப் வென்றார் 19 வயதான கேட்லின்

மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தைப் வென்றார் 19 வயதான கேட்லின்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.