Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜய் சேதுபதி பாலிவுட் நடிகைக்கு பாலியல் தொந்தரவு?; டுவிட் போட்டதால் பரபரப்பு!

விஜய் சேதுபதி பாலிவுட் நடிகைக்கு பாலியல் தொந்தரவு?; டுவிட் போட்டதால் பரபரப்பு!

3 years ago
in சினிமா, செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் வெளியிட்ட தகவலால் கொந்தளித்துப் போன பேன்ஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்து விடுவார்.

கதாநாயகனாக கலக்கி வந்த விஜய்சேதுபதி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார்.

கோலிவுட்டில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படத்திலும் வில்லனாக பாலிவுட்டில் ஓர் கலக்கு கலக்க இருக்கிறார். ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்து இருப்பேன். ஏன் என்றால் நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி ஒரு காலகட்டத்தில் வருஷத்திற்கு 7ல் இருந்து 10 படங்கள் நடித்து வந்ததால், அலுப்பு தட்டியது. ஆகையால் இப்போது நல்ல கதைகள் மற்றும் பெரிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகர் விஜய்சேதுபதி மீது அபாண்டமான பழியை சுமத்தி ட்வீட் போட்டுள்ளார். அதில் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடிகை கத்ரீனா கைஃபிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப் பார்த்த நெட்டிசன்ஸ் தமிழ் சினிமாவிற்கே அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும், ஆதாரமே இல்லாமல் ஒரு நல்ல மனிதர் மீது இப்படி அபாண்டமாக பழி போடுவது நியாயமா, இதெல்லாம் ஒரு பொழப்பா என்று நெட்டிசன்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்; அரசு தீர்மானம்!

10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்; அரசு தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு