Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி பழைய மாணவர் சங்கத்தின் 150 வது வருட ஒழுங்கமைப்பு குழு தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தலைமையில் புனித மிக்கேல் பாடசாலையில் (22) இடம்பெற்றது.

புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதல் கட்டமாக மட்டக்களப்பில் உள்ள பிரதான பாடசாலைகளின் பழைய மாணவர்களிற்கிடையிலான கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் யூலை மாதம் 29ம், 30ம் திகதிகளில் சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக்கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழையமாணவர்கள் போட்டியிடவுள்ளனர்.

பாடசாலைகளிற்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இப்போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் முதல் தடவையாக பழைய மாணவர்களிடையிலான கடினப் பந்து கிரிக்கட் போட்டி இடம் பெறுவது இதுவே முதற் தடவையாகும்.

150வது வருட நிறைவினை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் தபால் முத்திரை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பழைய மாணவர்சங்க உதவி போசகர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், பழைய மாணவர் சங்க உபதலைவர் இயேசு சபை துறவி அருட்தந்தை ரொசான் மற்றும் இச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும் மூன்று பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!
செய்திகள்

2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!

September 8, 2026
வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்
செய்திகள்

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்

September 8, 2026
தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
Next Post
அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை மறுதினம்; 13 தொடர்பில் ஆராயப்படுமாம்!

அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை மறுதினம்; 13 தொடர்பில் ஆராயப்படுமாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு