Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் மட்டு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் (காணொளி)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் மட்டு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் (காணொளி)

2 years ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்களையும் முன்னெடுக்காது. ஊழல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபுவின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (28) மாலை திடீர் விஜயம் ஒன்றினை பிரதியமைச்சர் மேற்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலிலும் பிரதியமைச்சர் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனியின் ஏற்பாட்டில் பிரதிமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் மைதிலி,பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்,வைத்தியசாலையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, வைத்தியசாலையின் தேவைப்பாடுகள்,வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றினை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி தி;ட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு மிக தேவைப்பாடான விடயங்களை பெற்றுக்கொடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடல்களைத்தொடர்ந்து வைத்தியசாலையின் அனைத்துப்பகுதிக்கும் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர் குழுவினர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளையும் பார்வையிட்டார்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇 www.battinaatham.net #srilanka #Batticaloa #npp

♬ original sound – battinaatham – battinaatham

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு விநியோகம்

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு விநியோகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு