மட்டக்களப்பு போதனா மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இந்த விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் சுகாதார உதவியாளரான தட்சணாமூர்த்தி புகழேந்தி
(40) என்பவரே உயிரிழந்தார்.
மருத்துவமனை வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடிக்கு
சென்றபோது விழுந்து படுகாயமடைந்தார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.