Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
50 சென்ட் உடன் இசைக்கச்சேரிக்கு தயாராகும் விஜயகாந்தின் மகன்!

50 சென்ட் உடன் இசைக்கச்சேரிக்கு தயாராகும் விஜயகாந்தின் மகன்!

3 years ago
in சினிமா, செய்திகள்

நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெறவிருக்கும் முதல் இசை நிகழ்ச்சியில் பிரபல ஹிப் ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்துகொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சனின் உலகளாவிய இசைக்கச்சேரி “The Final Lap Tour 2023” என்ற பெயரில் இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கிறருக்கிறது. இந்த இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் “Get Rich or Die Tryin” ஆல்பம் வெளியாகி 20-ஆவது ஆண்டு நிறைவுபெற்றதை முன்னிட்டு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட “Get Rich or Die Tryin” பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள “In da club,” “p.i.m.p,” மற்றும் “candy shop” போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட், நான் இந்தியாவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

டராக்டிகல் கான்சர்ட்டின் சி.இ.ஓ வம்சிதரன் கௌதமராஜன் இதற்கு முன்பாக ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட்டான ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்துவந்து கான்சர்ட் செய்தவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏகானையும் மிழில் லவ் ஆந்தம் பாடலுக்காக பணியாற்ற வைத்தவர்.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து விஜய பிரபாகரன் தெரிவித்ததாவது, ”திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை விஜயகாந்த்துக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலைத்துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
மட்டு மாமாங்க பிள்ளையார் ஆலய கொடியேற்றம் 2023!

மட்டு மாமாங்க பிள்ளையார் ஆலய கொடியேற்றம் 2023!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.