திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்றைய தினம் (13) குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் இடம்பெற்றது.
மாதங்களில் மார்கழி நானே என கிருஸ்பகவனின் முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம் கடந்த டிசம்பர் மாதம் 15 ம் திகதி ஆரம்பமாகியதுடன், இதில் குறிப்பாக அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை என்பன பாடப்பட்டு , அதிகாலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
விரதங்களில் சிறந்த விரதமாக கருதப்படும் சொர்க்கவாயில் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாக கடந்த வெள்ளிக்கிழமை 10.01.2025 இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
30 நாட்கள் இடம்பெற்ற திருப்பாவை பெருவிழா இன்றைய தினம் ( 13 ) இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து , சமுத்ரா தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
அதேசமயம் பூஜை நிகழ்வுகள் யாவும் அவர்கள் சோமேஸ்வரம் குருக்கள் தலைமைமையில் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.