Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவில் வைத்து ஜனாதிபதி அநுர குமார வெளியிட்ட அறிவிப்பு

சீனாவில் வைத்து ஜனாதிபதி அநுர குமார வெளியிட்ட அறிவிப்பு

2 years ago
in செய்திகள்

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நேற்று (15) அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,தெரிவிக்கையில்.

சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது.

எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறது.

பல தசாப்தங்களாக இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது, மேலும் இந்த விஜயம் நமது நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இதேவேளை அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சீன ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
Next Post
முச்சக்கர வண்டிகளின் மேலதிக உதிரிபாகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முச்சக்கர வண்டிகளின் மேலதிக உதிரிபாகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு