இலங்கை மின்சார சபை இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையிலுள்ளதன் காரணமாக மின்விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் மிண்கட்டணத்தை நிலுவையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேராதனை வைத்தியசாலை 70 மில்லியனையும் மன்னார் வைத்தியசாலை 14 மில்லியனையும் செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாகவே மின்சாரசபையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை சுகாதார அமைச்சும் மாகாணசபைகளும் முழுமையான தொகைகளை இன்னமும் தங்களிற்கு வழங்கவில்லை என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.