Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா

காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.எம். அஸ்ஹர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை பிரிவுக்கான ஆசிரியர் ஆலோசகர் எம். ஆர். எம். ஏ. ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பூமாலை அணிவித்ததுடன் அதனைத் தொடர்ந்து 2025ம் வருடத்துக்கான தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கு தரம் இரண்டு மாணவர்கள் பூமாலை அணிவித்து பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்பளித்தனர்.

அதனையடுத்து தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான இஸ்லாமிய விழுமியங்களுடனான வித்தியாரம்ப நிகழ்வும் நிறமூட்டப்பட்ட அரிசியில் தமிழ் அரிச்சுவடிகள் எழுதி பழக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 2025ம் வருடத்துக்கான தரம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சுமார் 69 புதிய மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
Next Post
பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்த சதோச

பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்த சதோச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு