சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் போாத்தலின் விலை சுமார் 50 யுவான் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்த சிறுநீரை வெள்ளை வையினுடன் கலந்து குடித்தால் அல்லது வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி குணமாகும். ஆனால், இதை எடுக்கும் போது உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.