பல தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல், 6 தொடருந்து சேவைகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-257.png)
இதற்கமைய, கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் தொடருந்துகளில் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் இந்த புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கபடவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.