மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள காரணமாக நாளை 8ம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு நீர்ப்பாசன காரியாலயம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படியில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீர்ப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்குதல் தடைப்படும் எனவும், இன்று வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-07-at-13.49.43_3f424fa3-726x1024.jpg)