விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் அரிசியை சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07) அமர்விலேயே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
அரிசிக்கான உத்தரவாத விலை தொடர்பில் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட்டுள்ளதாக நாமல் கருணாரத்ன இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கங்களைப் போன்று, கடைகளில் விலைக்கு வாங்கி கால்நடை உணவு என்ற போர்வையில் அரிசி விற்பனை செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போதைய விலையை விட குறைவான விலைக்கு அரிசியை நுகர்வோருக்கு பெற்றுத்தருவோம் என அவர் உறுதியளித்துள்ளார்.