மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு, மட்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்படுவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகள் தொடர்பான ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகளை, அவற்றை நேரடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு (RDHS) தெரிவிக்கலாம்.
உங்கள் ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை,
புகைப்படங்கள் (Photos),
காணொளிகள் (Videos),
குரல் பதிவுகள் (Voice)
அல்லது எழுத்துக்கள் (Text) வடிவில்
070 571 1151 Whatsapp எண்ணிற்கு அனுப்பலாம்:
”உங்கள் கருத்துக்கள், புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும், மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் பங்காற்றும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.