புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.,க ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுடில்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பெப்ரவரி 5ஆம் திகதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.
தேர்தலில் தேசிய அளவில் ‘இண்டியா’ கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க்68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை 8 மணி முதல் துவங்கியது.
ஆரம்ப முதலே பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. ஆம் ஆத்மி குறைவான இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் பா.ஜ.க- 48 இடங்களிலும், ஆம் ஆத்மி- 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் ஒரு இடத்தில் முன்னிலை வகித்த நிலையில் அந்த இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அனைத்து தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு கடந்த 5ஆம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அம்மாநில முதல்வர் அதிஷி போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட அம்மாநில முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.
புதுடில்லியில் 430 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு, கல்காஜியில் 3231 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி பின்னடைவு, மால்வியா நகரில் 5656 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தி பின்னடைவு, ஷகூர் பச்தில் 15745 வாக்குகள் வித்தியாசத்தில், சத்யேந்தர் ஜெயின் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
புதுடில்லி தொகுதியில் 3,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். 3 முறை புதுடில்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் படுதோல்வி அடைந்துள்ளார். 2013, 2015, 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்.
முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை வீழ்த்தினார். புதுதில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். ஜங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார்.
இதற்கிடையே, புதுடில்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் மணீஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்
புதுடில்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றி நல்லாட்சிக்கு கிடைக்கும் வெற்றி என்று கூறிள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜன சக்தியே முதன்மையானது! வளர்ச்சி வெற்றி பெறுகிறது, நல்லாட்சி வெற்றி பெறுகிறது.
பா.ஜ.க.வுக்கு கிடைத்த இந்த மகத்தான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு என் அன்பான டில்லி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவாகவும், பெருமையாகவும் இருக்கிறோம்.
புதுடில்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் டில்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதிலும், அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பது எங்கள் உத்தரவாதம்.
இந்த வெற்றிக்கு வழிவகுத்த, மிகவும் கடினமாக உழைத்த ஒவ்வொரு பா.ஜ.க. காரியகர்த்தாவை நினைத்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இன்னும் தீவிரமாக உழைத்து டில்லி மக்களுக்கு சேவை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.