Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சாரம் வழங்கினால் விவசாயம் கிடையாது; அமைச்சர்களின் புதினமான பிரச்சனை!

மின்சாரம் வழங்கினால் விவசாயம் கிடையாது; அமைச்சர்களின் புதினமான பிரச்சனை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உடவளவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் விநியோகிக்கப்படுமானால், தென் மாகாணத்தில் 3 மணித்தியால மின்​வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

தமது பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு கோரி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டங்களை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய, மகாவலி, நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் அமைச்சர் இங்கு கலந்துரையாடினார்.

அவ்வாறு நீர் வழங்கப்படுமானால், தற்போதுள்ள நீர் மட்டம் மேலும் குறைவடைவதன் காரணமாக தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

நிலவும் நீர் பிரச்சனை காரணமாக எதிர்வரும் வாரத்திற்குள் நெல் அறுவடையில் 16.81 பில்லியன் ரூபா மற்றும் மின்சார உற்பத்தி தடைப்படுவதால் 1.6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக சுமார் 30 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இவ்வருட அரிசி உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாய அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்!

தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு