பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக அழைத்து செல்லப்படவிருந்த 43 இலங்கை பிரஜைகளை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு குறித்த இலங்கை பிரஜைகளை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் முறியடித்துள்ளனர்.
இதேவேளை ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் ஜோர்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.