களனியில் காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தை இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (05) இரவு பத்தரமுல்லை பெலவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.