இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது.
அந்த தோட்டங்களில் பணிபுரியும் செயல் அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தரமான மற்றும் திறமையான முறையில் இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை கொழுந்து பறிப்பது குறித்து நடைமுறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மரியாதையுடன் உயர்தர சேவையை வழங்குவதுடன் தோட்டங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்,
தேயிலையின் தரத்தைப் பேணுதல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சித் திட்டம் மஹிந்தபால தலைமையில் நடைபெற்றதுடன், தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.