மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 வயதுடைய நபரின் விரலே வெட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 20 ஆம் திகதி அன்றே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாதிக்கப்பட்ட நபர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு மற்றுமொரு நபரும் வந்து சேர்ந்து இவர்களுடன் மது அருந்தியுள்ளார். இதன்போது, அவர்களில் ஒருவர் மற்றுமொரு நபரை பழிவாங்கும் விதமாக ஒருவருக்கொருவர் அறைந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டுக்கு அழைத்த நண்பர் பாதிக்கப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் இடது கையில் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரது வலது கையில் முழங்கைக்கு மேலே வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் 11 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் சந்தேகநபரான நண்பர் மது போதையில் கத்தியை காட்டி மிரட்டி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். களுத்துறை தெற்கு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.