நாடாளுமன்ற உணவகத்திலிருந்து ஜாம்போத்தல் மற்றும் ரின்பால் ஆகியவற்றை கடத்த முற்பட்டதாக கூறப்படும் சமையல்காரர் ஒருவர் நாடாளுமன்ற காவல்துறையினரால் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் அவர் சென்றவேளை சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர் வைத்திருந்த பொதியை சோதனை செய்தவேளை அதிலிருந்து மேற்படி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற சமையலறையில் உணவுப் பொருட்களை வீசியதற்காக பல ஊழியர்கள் நாடாளுமன்ற காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் நாடாளுமன்றத்தில் உயர் பதவிகள் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் செய்யும் பாரிய கொள்ளைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும், ஆனால் சாமானிய மனிதன் ஒருவன் மட்டும் தவறு செய்தால் இலங்கை நாட்டின் சட்டமானது மிக வேகமாக பாயும் என சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.