Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்வோம்

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்வோம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க உலக நாடுகள் கொண்டு வந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தம் பலவீனமானதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் முதல்முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த 2018ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.

அதன்பிறகு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த உறுதிமொழிகளை ஈரான் மெல்ல மெல்ல மீறத் தொடங்கியது. அந்த வகையில், அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக ஈரானுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், இராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்,’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்பு அவர்கள் பார்த்திடாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ஈரான் மீது 2வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணி; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணி; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு