நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு “levitating house” (பறக்கும் வீடு) போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
அது காற்றைப் பயன்படுத்தி வீடுகளை அவற்றின் அடித்தளத்திலிருந்து சற்று தூக்குகிறது.

சென்சார்கள் அதிர்வுகளைக் கண்டறிந்தவுடன் வீட்டின் அடியில் ஒரு ஏர்பேக் (காற்றடைத்த பை) செயற்பட்டு , அதிர்வுகள் வீடுகளை தாக்கா வண்ணம் சுமார் மூன்று சென்டிமீட்டர் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை முழுமையாக வெற்றியளிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட் சேதங்களை தவிர்த்து கொள்ள முடியும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.