மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் வான் பாயும் பகுதியில் நீராடிய ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
ஏறாவூரை சேர்த்த முஹமட் பஸ்ரி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் இறுதி கிரியைய்களுக்காக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.