தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பட்டலந்தவதை முகாம்களில் படுகொலைகள் நடைபெற்றது என்பதை இன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அனுர குமார திசாநாயக்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் தொடர்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் விமல் ரத்னநாயக்க அவர்கள் கூறுகின்றார் அரசியல் கைதிகளை அவ்வாறு உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்று. நாங்கள் அரசியல் கைதிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களை விடுதலை விடுதலை செய்வது என்பது அனுரகுமார திசாநாயக்க கூறி இருந்தார் தன்னுடைய பேனாவால் ஒரு கையெழுத்து விட்டால் போதும் நான் சில விடயங்களை செய்வேன் என கூறுகினார்.

எங்களுக்கு தெரியும் அவருடைய பேனாவால் கையெழுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று. எங்களுக்கு தெரியும் அதற்கு ஒரு பொறிமுறை இருக்கின்றது. நீதித்துறை அமைச்சர் முதலாவது சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இந்த கோப்புகளை எடுத்து இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்திருக்கின்ற குற்றங்கள் என்ன அதில் ஏன் இன்னமும் இந்த குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு முடியவில்லை என ஆராய வேண்டும்.
அரசியல் கைதிகள் என்று கூறப்படுபவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் மற்றும் ஏனைய அமைச்சர்கள் போன்று ஊழல் மோசடிகளில் செய்து கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் எங்களுடைய இனத்தினுடைய விடுதலைக்காக அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரிலே தான் அவர்களை சிறையிலே எத்தனையோ தசாப்தங்களாக வைத்திருக்கின்றார்கள். இவர்களை விடுதலை செய்வது பற்றி என்.பி.பி அரசாங்கம் எந்த நகர்வும் செய்யப் போவதாக இல்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதம் என்பதனை ஒரு மறைமுகமாக கோத்தபாய அரசாங்கத்தில் நேரடியாக கூறினார்கள் “நாங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் தர மாட்டோம் நாங்கள் சிங்கள மக்களின் ஜனாதிபதி இவ்வாறு தான் இருப்பேன்” என கூறினார், மஹிந்த ராஜபக்ச அவர்களும் அவ்வாறுதான் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அவரை சுற்றி வளைத்து இருந்த அனைவரும் இனவாதம் செய்தவர்கள் தான்.
இவர்கள் இனவாதம் இல்லை இனவாதம் இல்லை என்று அதைவிட மோசமான இனவாதிகளாக இருக்கின்றார்கள்.வடக்கு மாகாணத்தை தாங்கள் கடந்த காலத்தில் வந்த ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மாத்திரம் தான் அவர்களது நோக்கம். கிழக்கு மாகாணத்தில் அவர்கள் முயற்சி எடுக்கின்றார்கள் ஆனால் பாரிய தோல்வியை அடைவார்கள்.

இந்த தேர்தலைப் பொறுத்தளவில் இந்த அரசாங்கத்திற்கு சரியான ஒரு பதிலை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். என்றார்.
அதேசமயம் இந்திய பிரதமரின் வருகைக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதா என கேட்டபோது பதிலளித்த அவர்,
உண்மையில் எங்களுடைய கட்சியினுடைய தலைவர் செயலாளரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என நினைக்கின்றேன் ஆனால் நான் அறிந்த வகையில் நாங்கள் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாக அவ்வாறான உத்தியோகபூர்வ அழைப்புகள் வராது கட்சிக்கு வரும் வந்திருந்தால் அது தொடர்பாக எனக்கு எந்த அழைப்பும் நேரடியாக வரவில்லை என மேலும் தெரிவித்தார்.