சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் விடப்பட்டால் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில் சுமார் 04 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மைய காலங்களில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு நீரை திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.