பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்றுக் கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொதுப் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை வழங்கினால் அதனை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்துவதற்கு தாம் பங்களிப்பு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அமைச்சுப் பொறுப்பினை கோரும் உரிமை தமக்குக் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.