மியன்மார் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டின் இராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
மியன்மார் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டை ஆளும் இராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மியன்மார் இராணுவ அரசின் இடைக்காலத் தலைவரான மின் அவுங் ஹ்லைங் சுமார் 4,900 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் அதன் மூலம் தலைநகர் யாங்கோனிலுள்ள இன்செயின் சிறைச்சாலையிலிருந்து 19 பேருந்துகள் மூலம் சிறைக் கைதிகள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவின்படி 13 வெளி நாட்டவரும் விடுதலையாகவுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.