இலங்கையில் அரசியல் சட்டத்தில் உள்ள 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – என்று தி.மு.க எம்பி டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், “பாராளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பா. ஜ. க. அரசுகிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்பதில் பா. ஜ. க. அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத் தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – என்றார்.