களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் நித்திரை வருவதில்லை என கருணா தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான் பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை.

அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
72 வருடங்களுக்கு மேலாக வீட்டுக்கு வாக்களித்து வாக்களித்து வீடும் இல்லாமல் தமிழ் மக்கள் நடுத்தெருவில் கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர் என இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை புதைகுழிக்குள் கொல்லாமல் பாதுகாக்க முடியாமல் நிற்கின்றீர்களே வெட்கம் இல்லையா. எங்களை விமர்சிப்பவர்கள் அனைவரும், நாங்கள் போட்ட பாதைகளால்தான் செல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
