பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற தடை நேற்று 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் பாராளுமன்ற அமர்வுகள் ஒளிபரப்பாகும் நேரலைகளில் அர்ச்சுனா பேசப்படும் விடயங்கள் ஒளிபரப்பப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்களுக்காக, அவர் பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் 19.03.2025 அன்று அறிவித்தார்.

அதன்படி, மார்ச் 20, 21, ஏப்ரல் 8, 9, 10, மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரைகளை நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் அவ்வப்போது வெளியிடப்படும் தரக்குறைவான கருத்துக்கள், அநாகரீகமான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களும் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்படும் எனவும் அப்போது சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
