வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சந்தியாற்றில் 19 வயதுடைய அஸ்லுப் என்ற மாணவனின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் நேற்று நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு நீராட சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் குறித்த மாணவன் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர்தரம் கற்பதுடன், துபாயில் தொழில்புரியும் அலிகான் ஆசிரியரின் 19 வயதுடைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
