இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தாம் உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்புக்களை மாற்றியமைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.