வறட்சியினால் சேதமடைந்த நெற்பயிர்களை தீயிட்டு எரித்தால், பயிர் சேதங்களுக்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளது.நெற்பயிர்களுக்கு தீ வைப்பது சட்டவிரோதமானது எனவும், அண்மைய நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்ததாகவும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில், வறட்சியால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள்
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.