திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.