Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப்புக்கு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!

ட்ரம்ப்புக்கு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் உடபட 18 பேரை சரணடையுமாறு அமெரிக்க நீதிமன்றமொன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் 18 பேர் மீது மீது ஜோர்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஃபுல்டன் கவுண்டி மாவட்ட நீதிபதி பானி வில்லீஸ் நடத்திய இரண்டு ஆண்டுகள் விசாரணையைத் தொடர்ந்து இந்த குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது தோல்வியை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பானி வில்லீஸ் இந்த விசாரணையை நடத்தினார்.

அதாவது, ஜோர்ஜியாவைச் சேர்ந்த 16 பேரை ஒருங்கிணைத்த ட்ரம்ப், அவர்களை போலி வாக்காளர்களாக பயன்படுத்தினார். தான் வெற்றிபெற்றதாகவும் அறிவித்துக்கொண்டார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு

. ட்ரம்புடன் இணை சதிகாரர்களாக அவரது வழக்கறிஞர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ட்ரம்புக்கு எதிரான 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 98 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், அரசு பதவியில் இருந்துகொண்டு சத்திய பிரமாணத்தை மீறுதல், மோசடி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடியில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகள் அளித்தல் ஆகியவற்றில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

ஜோர்ஜியா தேர்தல் சட்டத்தில் இரண்டை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார். தேர்தல் தோல்வியை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அத்துடன் சட்டவிரோதமாக சதி செய்து ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவை மாற்றியுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஓகஸ்ட் 25ஆம் திகதி ட்ரம்ப் மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள 18 பேரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக சரணடைய வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரையும் ஒன்றாக விசாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றசாட்டையும் நீதிபதி மறுத்துவிட்டார்.

இதேவேளை ட்ரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
சற்று முன் இலங்கையில் ஒரு துப்பாக்கிச்சூடு!

சற்று முன் இலங்கையில் ஒரு துப்பாக்கிச்சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.